Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தல அஜித்தின் படத்தை கேவலமாக பேசிய பிரபல  நடிகர்! கொந்தளித்த தல ரசிகர்கள்!

தமிழ்நாட்டில் தல என்ற இரு எழுத்திற்கு கொந்தளிக்கும் மக்கள் கூட்டம் எண்ணிலடங்காதது. இதனை அறிந்தும் பிரபல நடிகர் ஒருவர் தல அஜித்தின் படத்தை கேவலமாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவர் சமீபத்தில் ஒவ்வொரு படத்திலும் வெற்றியை குவித்துக் கொண்டிருக்கிறார். 

அஜித் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பல நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டிக் கொண்டு வரும் நிலையில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்  படத்தைகுறைத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் மற்றும் பேபி அனிகா நடித்த திரைப்படம் தான் விசுவாசம். இந்த படம் தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றது.இந்தப் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் இதனை கன்னடத்தில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார்இடம் விசுவாசம் படத்தை காட்டியுள்ளனர். அதைப்பார்த்து அவர் இதெல்லாம் ஒரு படமா என அசிங்கப்படுத்தி விட்டாராம். இது  தல அஜித் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.

Exit mobile version