Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள பிரபல நடிகையின் படம்: கொண்டாட்டத்தில் உள்ள ரசிகர்கள்

OTT

ரனாவத் கங்கனா நடிப்பில் ஹிந்தியில் வெளியான “குயின்” படம், தற்பொழுது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

 

இப்படம் 4 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.தமிழில்  காஜல் அகர்வாலை நாயகியாக கொண்டு “பாரிஸ் பாரிஸ்” எனவும், தமன்னாவை நாயகியாக கொண்டு தெலுங்கில் “தட் இஸ் மகாலட்சுமி” எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனை  மோகனை நாயகியாக கொண்டு “ஜம்ஜம்” எனவும், கன்னடத்தில் பருள் யாதவை கதாநாயகியாக கொண்டு “பட்டர்பிளை” எனவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது ஹீரோயினை மையப்படுத்தி உருவாகிய கதையாக தெரிகிறது. 

 

நான்கு மொழிகளிலுமே, இப்படத்தை மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட  பதிப்பை நடிகரும் இயக்குனருமான  ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து, ஒரு வருடத்திற்கு மேலாகியும் இப்படம் வெளியாகாமல் முடங்கி போய்விட்டது.

இதற்கு காரணம் கொரோனா பொது முடக்கத்தால், திரையரங்கு மூடப்பட்டதே,  ஆனால் தற்பொழுது இந்த நான்கு மொழி படத்தையுமே நேரடியாக  ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்போவதாக படக்குழு முடிவு செய்துள்ளது. 

 

இந்த  ஓ.டி.டி வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version