Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 பிரபல நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு!..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!..

Famous actress dies in car accident!..Shock among fans!..

Famous actress dies in car accident!..Shock among fans!..

 பிரபல நடிகை கார் விபத்தில் உயிரிழப்பு!..ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி!..

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச்.இவருடைய  வயது 53.இவர் சென்ற வாரம் தனது மினி கூப்பர் காரில் ஒரு நிகழ்ச்சிக்காக  சென்று கொண்டிருந்தார்.அப்போது திடிரென அவர் சென்ற கார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டிடம் ஒன்றின் மீது மோதியது.

இந்த விபத்து பற்றி  தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி காரில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த நடிகையை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் நடிகை அன்னே ஹெச்சின் முதுகு பகுதியில் அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது.

அவருக்கு மூளையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.மேலும்  இவர் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ, கேட் பைட், தி லாஸ்ட் வேர்ல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.இவர் காரை அதிவேகமாகவும் மற்றும் மது அருந்தி விட்டு காரை ஓட்டியதால் இந்த கோர விபத்து நடந்திருக்கலாம் என போலீசார்கள் தெரிவித்தார்கள்.இந்நிலையில்  போலீசார் இதனை உறுதிப்படுத்தவில்லை. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த அன்னே ஹெச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவர் மறைந்து விட்டாலும் அவரது மகன்கள் வழியே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஹோமர் லப்பூன் மற்றும் அட்லஸ் என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

அவர் வலியில் இருந்து விடுபட்டு நிரந்தர சுதந்திரம் அடைந்து விட்டார் என நம்புகிறேன் என்று ஹோமர் தெரிவித்து உள்ளார். அன்னே ஹெச் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் திரைவுலகம் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

Exit mobile version