Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சினிமாவில் புகழ்பெற்ற நடிகை காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

Famous actress in cinema has passed away !! Screening in tragedy !!

Famous actress in cinema has passed away !! Screening in tragedy !!

சினிமாவில் புகழ்பெற்ற நடிகை காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

நடிகை ஜெயந்தி இந்தியா தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி படங்களில் உட்பட சுமார் 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட திரைப்படத் துறையை ஜெயந்தி அபிநய சாரதே என்ற அடைமொழியுடன் கௌரவித்தது. தமிழில் அபிநய சரஸ்வதி என்று சரோஜா தேவி என்ற கன்னட நடிகை அன்புடன் அழைத்தார்.

இவர் மிகச்சிறிய வயதில் தன் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என்.டி. ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னாளில் ஜெகதேகவீருணி கதா, குல கௌரவம், கொண்டவீதி சிம்மம், ஜஸ்டிஸ் சவுத்ரி படங்களில் கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இளம் பருவத்திலேயே சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சில வேடங்களில் நடித்துள்ளார். மேலும் நடிப்பை நன்றாக கற்றுத் தேர்ந்த மதிப்பிற்குரிய அவர் ஆனார். இவர் கன்னட திரைப்படத் துறையில் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் சுமார் 30 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். கன்னட இயக்குனர் ஒய்.ஆர் சுவாமி அவரை ஒரு நடன ஒத்திகையில் கண்டனர். அவர் ஜெனு குடு படத்தில் அறிமுகம் செய்ததோடு கமல குமரி என்ற பெயரை ஜெயந்தி என்று மாற்றினார். ஜெயந்தி அன்றைய புகழ்பெற்ற நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளனர். கே.எஸ் அஸ்வத், பண்டரிபாய், ஜெயஸ்ரீ, உதயகுமார், கல்யாணகுமார் மற்றும் ராஜ்குமார் உடன் மட்டும் 45 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் மிஸ் லீலாவதி மிகவும் சிறப்பு வாய்ந்த படம். இந்த படத்தில் சிறுவயது பெண்ணாக நடித்தார். இது தேசிய விருது பெற்ற திரைப்படம் ஆனது.

இந்நிலையில் தற்போது இவருக்கு 75 வயது நடைபெற்று வருகிறது. அவர் தற்போது பெங்களூருவில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மேலும் இவருக்கு சில நாட்கள் முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய சினிமா வட்டாரங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version