பிரபல நடிகை ராதிகாவிற்கு இப்படி ஒரு வியாதியா..?? அவரே கூறியுள்ள ஷாக்கிங் நியூஸ்..!!

0
894
Famous actress Radhika has such a disease

பிரபல நடிகை ராதிகாவிற்கு இப்படி ஒரு வியாதியா..?? அவரே கூறியுள்ள ஷாக்கிங் நியூஸ்..!!

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் தான் நடிகை ராதிகா. இயக்குனர் சிகரம் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்திற்காக புதுமுகம் ஒருவரை தேடி கொண்டிருந்த சமயத்தில் திருமண ஆல்பம் ஒன்றில் ராதிகாவை பார்த்துள்ளார். உடனே அவர் தான் இந்த படத்தின் நாயகி என்று முடிவு செய்த பாரதிராஜா உடனே ராதிகாவின் அம்மாவிடம் சம்மதம் வாங்கி இந்த படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதுநாள் வரை இலங்கையில் இருந்த ராதிகாவிற்கு அப்போது தமிழ் சுத்தமாக தெரியாதாம். சிங்களமும் ஆங்கிலமும் கலந்து தான் பேசுவாராம். ஆனாலும் அவரை கிழக்கே போகும் ரயில் படத்தில் சொந்த குரலில் பேசி நடிக்க வைத்தது தான் பாரதிராஜாவின் திறமை. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான ராதிகா சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

இப்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா தனக்கு ரத்த கொதிப்பு இருப்பதால், படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்திருப்பதாக கூறியுள்ளார். அதன்படி, நடிகர் கமலுடன் சிப்பிக்குள் முத்து மற்றும் பெயர் சொல்லும் பிள்ளை ஆகிய படங்களில் நடிக்கும்போதுதான் இவருக்கு ரத்த கொதிப்பு இருந்ததாம்.

அதனால் படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து விடுவாராம். முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி சிறிது நேரம் கழித்து படப்பிடிப்பு தொடங்குமாம். ராதிகாவின் இந்த பிரச்சனையை வைத்து கமல் ஒருமுறை தனக்கு வேலை உள்ளது எனவே படப்பிடிப்பில் மயங்கி விழுவது போல நடி என்று கூறியுள்ளார். ஆனால் ராதிகாவோ மறுத்து விட்டாராம்.

இது நடந்த 2 நாள் கழித்து ராதிகா உண்மையாகவே மயங்கி விழுந்து விட்டாராம். இதை பார்த்த கமல் கடுப்பாகி அவரை திட்டியுள்ளார். இப்படி தனக்கு இருந்த பிரச்சனையை கூட ராதிகா காமெடியாக கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் இப்படி கூட நடந்துள்ளதா? என ஷாக்காகி வருகிறார்கள்.