வீட்டில் மதிப்பே இல்லை எனப் புலம்பும் பிரபல நடிகை சாய் பல்லவி!!

0
456
Famous actress Sai Pallavi laments that there is no value at home!!

தென்னிந்திய நடிகைகளுள் முன்னணி நடிகை சாய் பல்லவி. இவரது எளிமையான தோற்றத்துக்கும், எமோஷனலான நடிப்புக்கும், மான் போன்று துள்ளி ஆடும் நடனத்திற்கும் தனி பேன்ஸ் க்ளிப்பே உண்டு.

ஆரம்ப காலகட்டத்தில் ‘தாம் தூம்’ படத்தில் தோழி கேரக்டரில் நடித்திருப்பார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்” படத்தில் ‘மலர்’ என்ற கதாபாத்திரம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். அதைத்தொடர்ந்து ‘கலி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். அடுத்ததாக வருண் தேச்சுடன் இணைந்து ‘பானுமதி’ படத்தில் நடித்தார். தெலுங்கில் முதலாக ‘ஃபிதா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். கடைசியாக இவர் நடித்த ‘அமரன்’ படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

நடிப்பு ஒரு புறம் இருக்க நடனத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தனது அம்மாவின் ஒப்புதலோடு ‘விஜய்’ டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருடைய நடனத்தை பற்றி சொல்லவே வேண்டாம். அவ்வளவு அருமையாக நடனமாடுவார். மாரி 2 திரைப்படத்தில் இவரும் தனுஷும் ஆடிய “மை டியர் மச்சான்” பாடல் உலக அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப பாசம்:

இவரது தந்தை ‘ராதா கண்ணன்’, தாய் ‘செந்தாமரை கண்ணன்’. இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவரது தங்கையின் பெயர் ‘பூஜா கண்ணன்’. இவரும் ஒரு ‘நடிகை’. தங்கை மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பதாக ஒரு நேர்காணலில் சொன்னார். தன் தங்கையை சிறு வயதில் மிரட்டிய தோழிகளை இவர் கண்டித்ததாகவும் கூறினார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பூஜா கண்ணனுக்கு ‘படுகர்’ இனமுறைப்படி வினித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அத்திருமணத்தில் தங்கை பூஜா கண்ணனுடன், சாய் பல்லவி சேர்ந்து நடனம் ஆடிய வீடியோவும் வைரல் ஆனது.

சாய் பல்லவி நடிகை என்பதை தாண்டி டாக்டர் படிப்பையும் முடித்துள்ளார். இவர் இதைப் பற்றி கூறும் போது, நான் டாக்டருக்கு படித்து வந்த நேரத்தில் கூட ஏதேனும் அறிவுரை கூறினால் எங்கள் வீட்டில் அதனை மதிக்கவே மாட்டார்கள். நான் நடிக்காமல் டாக்டர் வேலை பார்த்திருந்தால் கூட அவர்கள் என் பேச்சை கேட்டிருக்க மாட்டார்கள் என்றார்.