Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகையின் திரில்லர் படம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் அனுஷ்கா செட்டி செட்டி. இவர் தற்போது நிசப்தம் என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாலினி பாண்டே ,அஞ்சலி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மேலும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் ஒரு இம்போர்ட்டண்ட் ரோலில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த  இப்படத்தின்  ட்ரெய்லர் இது ஒரு த்ரில்லர் படம் என்பதை நமக்கு தெளிவாக தெரிவிக்கிறது. 

 காது கேட்காத வாய் பேச முடியாத அனுஷ்காவிற்கு உதவி செய்யும் அஞ்சலி பின்னர் இதெல்லாம் பேய்களால் நடக்கிறது என்பதை அறிந்து அதன் மீது நம்பிக்கை இல்லாமல் அனுஷ்காவிற்கு யாரோ உதவுவதாக நினைக்கிறார். 

பின்னர் மாதவன் யார் என்பதையும் அனுஷ்கா இந்த கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்துகிறார்.விறுவிறுப்பான கதை களம் கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் என்று திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாறிக் கொண்டே இருந்தது. ஆனால் இப்பொழுது இப்படத்தை பிரபல இணையதளமான அமேசான் ப்ரைம் நேரடி வெளியீட்டு உரிமையை பெற்றதாக தகவல்கள் வெளிவருகின்றன. கொரோனாவால் அமேசானுக்கு அடிச்ச லக் பார்த்தீங்களா !!!

Exit mobile version