Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல இயக்குனர் படத்தில் இணையும் பிரபல நடிகை!! அதிகாரப்பூர்வமாக வெளியான போஸ்டர்!!

Famous actress to join famous director's film !! Officially released poster !!

Famous actress to join famous director's film !! Officially released poster !!

பிரபல இயக்குனர் படத்தில் இணையும் பிரபல நடிகை!! அதிகாரப்பூர்வமாக வெளியான போஸ்டர்!!

ஷங்கர் பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் பல முன்னணி திரைப்படங்களை இயக்கியுள்ளார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்பங்கள் அருமை, பிரம்மாண்டம் என அதிரடியாக சமூக மாற்ற கருத்துகளாக பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குனர் ஆவதற்கு முன் ஏ.ஏன். சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மேலும் ஷங்கரின் திரைப்படங்கள் பொதுவாக சமகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் விழிப்புணர்வு கருப்பொருள்களை கையாளுகின்றன. அவர் வழக்கமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உடன் ஒத்துழைக்கிறார். இருவரும் சேர்ந்து 10 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளனர். இவரின் இந்தியன் மற்றும் ஜீன்ஸ் ஆகிய இரண்டு படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான அகாடெமி விருதுக்காக இந்தியாவால் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் இவருக்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் ஷங்கரின் திரைப்படம் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த நான்காவது படம் மற்றும் உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஆறாவது இந்திய படமாகும். மேலும் இவர் 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 5க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

 

இந்த நிலையில் இவர் தற்பொழுது கமலஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தை உருவாக்கி வந்தார். இதை தொடர்ந்து இவர் தற்பொழுது தெலுங்கு நடிகரான ராம்சரண் மற்றும் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் உடன் தனித்தனி படங்களில் கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதைத் கடந்த சில வாரங்களாகவே இதைப் பற்றிய தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது மேலும் ஒரு நல்ல செய்தி இந்த படத்தை பற்றி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தற்ப்பொழுது ராம்சரணுடன் ஷங்கர் இணையும் படத்தின் கதாநாயகி யார் என்று அறிமுகம் செய்துள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி இணைகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தத் தகவலை நடிகை கியாரா அத்வானி பிறந்தநாளான இன்று சிறப்பாக அறிவித்துள்ளனர்.

 

Exit mobile version