Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காவாலயா பாடலுக்கு செம நடனம் போட்ட பிரபல நடிகைகள்!! இணையத்தில் வைரலான பதிவு!! 

famous-actresses-danced-to-kavalaya-song-viral-post-on-the-internet

famous-actresses-danced-to-kavalaya-song-viral-post-on-the-internet

காவாலயா பாடலுக்கு செம நடனம் போட்ட பிரபல நடிகைகள்!! இணையத்தில் வைரலான பதிவு!! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் தமன்னா ஆடிய காவலா பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி செம வரவேற்பை பெற்றுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற வெற்றி படங்களை இயக்கிய  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெய்லர். இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் ஜெய்லராக நடிக்கிறார்.  சூப்பர் ஹிட் ஆக்சன் அதிரடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இந்த சூழ்நிலையில் ஜெய்லர்  படத்தில் இருந்து சில்பா ராவ் பாடி அனிருத் இசையமைத்த காவாலா என்ற பாடல் வெளியாகி இணையதளத்தில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்தப் பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளார். சர்வதேச அளவில் பலரையும்  இந்தப் பாடல் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் செந்தில் நாயகம் என்ற இன்ஜினியர் ஒருவர் தமன்னாவின் காவலா பாடல் நடனத்தை பல்வேறு நடிகைகள் ஆடும் ஸ்டைலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளார். இது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

செந்தில் நாயகத்தின் டுவிட்டர் கணக்கில், சிம்ரன்,ஹன்சிகா, நயன்தாரா, மாளவிகா, கத்ரீனா கைப், கெய்ரா அத்வானி, மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் ஆடும் ரீல்ஸ் வீடியோக்கள் காணப்படுகின்றன. 

 

சிம்ரன்:

நயன்தாரா:

காத்ரீனா கைப்:

 

 

Exit mobile version