Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகை!

#image_title

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பிரபல காமெடி நடிகை!

பிரபல காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஆர்த்தி. இவர் காமெடி நடிகரான கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

படங்கள் தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்த ஆர்த்தி முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஆர்த்தி அதிமுக கட்சியில் இருந்து விலகி விட்டார்.

இதற்கிடையில் ஆர்த்தியின் கணவர் நடிகர் கணேஷ் பாஜக கட்சியில் இணைந்திருந்தார். இந்நிலையில், தற்போது நடிகை ஆர்த்தியும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக கட்சியில் சேர்ந்துள்ளார். தேர்தல் தேதி நெருங்கி விட்ட நிலையில், நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் இருவரும் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழகத்தில் பாஜகவிற்கு பெரியளவில் வரவேற்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அண்ணாமலை அந்த கட்சியில் இணைந்த பின்னர் கொஞ்சம் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே பாஜகவில் நடிகை குஷ்பு இருந்த நிலையில், சமீபத்தில் நடிகை ராதிகா இணைந்தார்.

அவரை தொடர்ந்து இப்போது நடிகை ஆர்த்தி இணைந்துள்ளார். எனவே இந்த தேர்தலில் பாஜக ஓரளவிற்கு கணிசமான வெற்றிகளை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் பிரச்சாரம் சூடுபிடித்து காணப்படுகிறது. ஆங்காங்கே வேட்பாளர்கள் கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Exit mobile version