Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

#image_title

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஏராளமான மக்களை ரசிகர்களாக கொண்ட ஒரே விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் நமது மாநிலத்தில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இந்த விளையாட்டில் வீரர்கள் கால் பதித்து வருகின்றனர். அவ்வாறு பல்வேறு தடைகளை தாண்டி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தவர் தான் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்.

இந்திய அணிக்காக 150 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். இவர் அணியில் விக்கெட் கீப்பர் ஆகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறங்கியுள்ளார். ஏராளமான போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக் கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் வீராங்கனையான தீபாவை  திருமணம் செய்தார்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் வர்ணனையாளராகவும், ஐபிஎல்-இல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியும் வருகிறார். தினேஷ் கார்த்திக்கு சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், காசினோ டிரைவ் சாலையில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இந்த வீடு விதிகளை மீறி கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு அந்த வீட்டிற்கு அதிகாரிகள் சோதனை செய்து சீல் வைத்தனர்.

இந்த நிலையில் அந்த வீட்டின் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினேஷ் கார்த்திக் புகார் தெரிவித்துள்ளார். தனது நீலாங்கரை வீட்டிலிருந்து அசல் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்க எடுத்துச் சென்றபோது தொலைந்து விட்டதாக அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தினேஷ் கார்த்திக்கின் புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Exit mobile version