Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் சூர்யாவை  சீண்டிய பிரபல நடன இயக்குனர்! சூர்யாவின் பதில் !

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. இவர் சினிமா பேமிலி பேக்ரவுண்ட் கொண்டிருந்தாலும் தன் கடின உழைப்பினால் முன்னேறினார்.  நடிகர் சூர்யா ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக அகரம் பவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதை நடத்தி வருகிறார். இவரின் கல்வி ரீதியான உதவியால் பல ஏழை மாணவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம்.

சூர்யா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தமிழ்நாட்டில் கொண்டிருக்கிறார். நீட் தேர்வுக்கு பயந்து தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்தி பரவாலக நாட்டில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சூர்யா நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மத்திய மாநில அரசுகள் கல்வி விஷயத்தில் செய்யும் தவறுகள் அனைத்தையும் குறிப்பிட்டிருந்தார். இதனால் அனைத்து அரசியல்வாதிகளின் கண்டனங்களும் அவரை வந்தடைந்தன.இது ஒருபுறம் இருக்க பிஜேபி கட்சி நிர்வாகிகளும் பல கட்சியின் முக்கிய பிரமுகர்களும் சூரியாவை தாக்கிப் பேசி வருகின்றனர்.

பிஜேபி கட்சியில் ஒருவரான காயத்ரி ரகுராம் என்பவர் தமிழ்சினிமாவில் நடிகையாகவும் நடன கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் பிக் பாஸ் சீசன் 1ல்   பங்கேற்றால் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காயத்ரி ரகுராம் ‘நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் இறந்ததால் தேர்வை தடை செய்யும் சூரியா அவர்கள் சினிமா பேனர் கட்டும் போது ரசிகர்கள் இறந்தால் சினிமாவை தடை செய்து விடலாமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நடிகர் சூர்யா எவ்வித பதிலும் அளிக்காமல் உள்ளார்.இதற்கு சூர்யா எந்த மாதிரியான பதிலை கொடுக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் நடிகை மீரா மிதுன் அவதூறாக பேசிய போதே சூர்யா சைலண்டாக எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் போதும் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார். இதற்கும் அதே பதில்தான் கூறுவாரா என்று வட்டாரங்கள் யோசிக்கின்றனர்.

Exit mobile version