Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் விஜயின் கோபத்தைத் தூண்டிய பிரபல இயக்குனர்! நடந்தது என்ன?

சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் சில திரைப்படங்கள் பெரும் சிக்கலை சந்தித்து அதைத்தாண்டியே திரையரங்குக்கு வந்தடைகின்றது. ஏனெனில் அவர் திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம் பெறும் என்பதால் அந்த திரைப்படங்கள் பல தடைகளை தாண்டி வெளியிடப்படுகிறது.

ஒன்பது வருடங்களுக்கு முன் தளபதி விஜய், அசின் இவர்கள் இணைந்து நடித்த காவலன் திரைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. அப்போது இயக்குனர் சக்தி சிதம்பரம் இத்திரைப்படத்தை வாங்கி அனைத்து திரையரங்குகளுக்கும் விற்பனை செய்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குனர் சக்தி சிதம்பரம் காவலன் திரைப்படத்தை விற்பனை செய்த பிறகு தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கவேண்டிய பங்கினை சரிவர கொடுக்கவில்லை. மேலும் இந்த தகவலை அறிந்த தளபதி விஜய், இயக்குனர் ஷக்தி சிதம்பரத்தின் மீது கோபமானார்.

 பின்னர் தளபதி விஜய் அனைத்து தயாரிப்பாளர்கள் இடமும் தங்கள் திரைப்படங்களை தாங்களே தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து நேரடியாக விற்பனை செய்யுமாறு, அனைத்து தயாரிப்பாளர் சங்க  உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version