ஹாலிவுட் படங்களின் முன்னணி நடிகராக திகழும் சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் உயிரிழந்தார். இவர் தனது சினிமா பயணத்தை 2008 ஆம் ஆண்டு வெளியான தி எக்ஸ்ப்ரஸ் தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி என்ற படத்தில் சிறு வேடத்தில் நடிப்பதன் மூலம் தொடங்கினார்.
அதன்பின் 2013 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘42’ படத்தின் மூலம் சாட்விக் போஸ்மேனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன்பின் மெகா ஹிட் கொடுத்த பிளாக் பேந்தர் படத்தில் நடித்த சாட்விக் போஸ்மேனுக்கு உலகம் முழுவதிலும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களின் கதா நாயகனாக மாறினார்.