Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொழிலதிபரை மணந்த பிரபல நடிகை! வாழ்த்துக் கூறிய திரைக்கலைஞர்கள்!

ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். மலையாள நடிகை மியா ஜார்ஜ். இவர் அடுத்தடுத் அடுத்தடுத்து இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் ரெட் பஸ் டிரைவிங் லைசன்ஸ் மிஸ்டர் ஆகிய மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் 

விக்ரமுடன் கோப்ரா என்ற படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.இப்படம்  கொரோனா வின் காரணமாக தடைபட்டு உள்ளது. இவருக்கும் அஸ்வின்  என்ற தொழில் அதிபருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இந்நிலையில் கொரோனா வின் காரணமாக அவர்களுடைய திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால் அது எப்படி எவ்வாறு நடத்துவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்து இருந்ததாக மியா ஜார்ஜ் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

ஆனால் இவர்களுடைய திருமணம் கொச்சியில் உள்ள சென் மேரீஸ் சர்ச்சில் அவர்களுடைய சொந்தங்கள் சூழ நடந்து முடிந்தது  இவர்களுடைய திருமணத்திற்கு திரையுலகினரும் ரசிகர்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version