Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசியல் களத்தில் பரபரப்பு! பிரபல கட்சி தலைவரின் திடீர் முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

Stalin

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக மூக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்தார். தற்போது கருணாஸை தொடர்ந்து பிரபல நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான டி.ராஜேந்தர் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை எனக்கூறி பரப்பரப்பு கிளப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர், அம்மா காலத்திலிருந்து தொடங்கி இந்நாள் துணை முதல்வர், அண்ணா தி.முக.வின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு.ஓ.பி.எஸ். அய்யா அவர்கள் என் நீண்ட நாள் நண்பர் ஆவார். நடைபெறும் இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பு மாண்புமிகு ஓ.பி.எஸ் அய்யா அவர்கள் என்னை அழைத்தார், சென்றேன். மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கையில் பூங்கொத்து ஒன்றை தந்தேன். கண்ணியமாய் விடைபெற்று வந்தேன்.

மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் இல்லாமல் அண்ணா தி.மு.க. சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம், அதைப்போல் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள்   இல்லாமல் தி.மு.க சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம்.  இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம் இதைத்தவிர கூட்டணியென்று சேர்த்திருக்கிறார்கள் பக்க பலம் அதைத் தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம். இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப்போகிறது பலப்பரிட்சை இதில் நான் போய் என்ன செய்யப் போகிறேன் புது சிகிச்சை.

ஒருவருடைய வாக்கு வன்மை, அவர் வார்த்தையில் இருக்கும் தன்மை அதில் வெளிப்படும் உண்மை . அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று சில முன்னாள் முதல்வர்கள் நம்பினார்கள். அதன் அடிப்படையில் என்னை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள். அது ஒரு காலம்.

“கொள்கையை சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக் காலம் கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்பது இந்தக் காலம்காலமும் சரியில்லை. களமும் சரியில்லை கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.

பத்தும் பத்தாதற்கு இது கொரோனா காலம் பாதுகாப்பு வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும் முகமூடி பக்குவப்பட்டவனாய் வாழ வேண்டு மென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி இந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் இலட்சிய தி.மு.க நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை, அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும், நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என தன்னுடைய வழக்கமான அடுக்குமொழியிலேயே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version