மீண்டும் விஜய் டிவிக்கு வரும் பிரபல தொகுப்பாளினி!! புதிய சீரியலில் நடிக்க உள்ளாராம்!!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முக்கியமாக இருப்பவர் தொகுப்பாளர்கள். தொகுப்பாளர்களை வைத்தே அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கனித்து விடுகின்றனர். இந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவரை இவரின் ரசிகர்கள் டிடி என்று அன்புடன் அழைத்து வருகின்றனர்.
மேலும் இவர் தொலைக்காட்சிக்கு வர முக்கிய காரணமே இவரின் அக்கா பிரியதர்ஷினி. இவருக்கு தொலைக்காட்சியில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் இவர் பல தனியார் தொலைக் காட்சிகளில் முன்னணி தொகுப்பாளராக இருந்தார். பின்னர் ராமண கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னரும் பல நடன நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பிரியதர்ஷினி குழந்தை நட்சத்திரமாக தாவணிக் கனவுகள், இதய கோவில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதே போல் சின்னத்திரையில் அக்னி பறவை விழுதுகள், தமிழ் கடவுள் முருகன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட சில மேலே நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் அவ்வபோது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சினிமா படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய நடிகைகள் தற்போது சின்னத்திரை நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த இரண்டாவது லாக்டோன் முடிவிலிருந்து தொலைக்காட்சிகளில் பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் சிங்கப் பெண்ணே என்ற புதிய சீரியல் வரப்போகிறது என்று சில வாரங்களாகவே புரோமோவினை வெளியிட்டு வந்தனர். மேலும் அந்த சீரியலில் பிரபல தொகுப்பாளினி பிரியதர்ஷனின் நடிக்கிறார் என்ற செய்தி வந்திருந்தது.
இதை தொடர்ந்து தற்போது பிரியதர்ஷன் குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் பிரியதர்ஷினி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நம்ம வீட்டுப் பெண்ணும் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு புதிய நாடகத்திற்கான ப்ரோமோ சில வாரங்களாகவே வெளியாகி வருகிறது. இந்த நாடகம் என்று முதல் ஆரம்பம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் விஜய் டிவியிலிருந்து வெளியிடவில்லை.