Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆம்ஸ்ட்ராங் 16 வது நாள் காரியம்.. ரத்தத்திற்கு ரத்தம் பழிக்கு பழி!! பிரபல ரவுடியின் மனைவி கதறல்!! 

Famous rowdy Nagendran's wife petitions for her husband's protection in relation to Armstrong's murder case

Famous rowdy Nagendran's wife petitions for her husband's protection in relation to Armstrong's murder case

ஆம்ஸ்ட்ராங் 16 வது நாள் காரியம்.. ரத்தத்திற்கு ரத்தம் பழிக்கு பழி!! பிரபல ரவுடியின் மனைவி கதறல்!!

தமிழகத்தையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கானது தினம்தோறும் புதிய திருப்பு முனைகளை கொடுக்கிறது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று கூறினாலும் இதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளதாக கூறுகின்றனர். அதேபோல அதிமுக திமுக பாஜக என அனைத்து கட்சி நிர்வாகிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த திட்டம் தீட்டப்பட்டதே முக்கிய காரணம் என்று கூறுகின்றனர்.

குறிப்பாக இந்த கொலை வழக்கில் பொன்னை பாலு மற்றும் அவரது மைத்துனரைத் தொடர்ந்து ஆற்காடு சுரேஷின் ரகசிய காதலி என பலரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆருத்ரா வழக்கில் பலருக்கும் பணத்தை மீட்டு கொடுத்தது மட்டுமின்றி ஆற்காடு சுரேஷை கொலை செய்த கூலிப்படைக்கு ஆர்ம்ஸ்ட்ராங் அடைக்கலம் கொடுத்ததாக கூறுகின்றனர். இதற்காகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக சுரேஷ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கென்று பல நாட்களாக ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு திட்டம் தீட்டியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவரை முதன்முதலாக வெட்டிய திருவேங்கடம், அரிவாள்வீச்சு போன்றவற்றில் பேர் போனவராம். போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற பொழுது தப்பு செல்ல முயன்றதாக என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று ஆம்ஸ்ட்ராங்கின் 16வது நாள் காரியம் என்பதால் பழிக்கு பழி வாங்க கொலை சம்பவம் நடைபெறும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அளித்ததையடுத்து பலத்த போலீஸ் ஏற்பாடு போடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சென்னை வியாசர்பாடி-யின் பிரபல ரவுடியான நாகேந்திரன் என்பவர் தற்பொழுது சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்துவதாக கூறுகின்றனர். ஆனால் நாகேந்திரன் மனைவி இதனை முற்றிலும் மறுத்து தனது கணவர் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மனித உரிமை ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எனது கணவர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பட்சத்தில் எப்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்க முடியும். அவரது உயிருக்கு கட்டாயம் ஆபத்து உள்ளது. இதற்கு தொடர்பு உள்ளதாக கூறும் செய்தி முற்றிலும் வதந்தி. அதுமட்டுமின்றி காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த திருவேங்கடம் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதை போலவே தனது கணவரும் சுட்டுக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இதனால் என் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுள்ளார்.

Exit mobile version