Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரகசியமாக நிச்சயம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை மற்றும் நடிகர்!! அவர்கள் யார் என்று நீங்களே பாருங்கள்!!

famous-serial-actress-and-actor-who-has-secretly-got-engaged-see-for-yourself-who-they-are

famous-serial-actress-and-actor-who-has-secretly-got-engaged-see-for-yourself-who-they-are

ரகசியமாக நிச்சயம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை மற்றும் நடிகர்!! அவர்கள் யார் என்று நீங்களே பாருங்கள்!!

பொதுவாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் தற்பொழுது சீரியல்களுக்கு பிரபலமாக இருக்கும் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கு என்றும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் பாக்யலக்ஷ்மி சீரியலுக்கு உள்ள ரசிகர்கள் மிகவும் அதிகம். அதே வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இந்த இரண்டு நாடகங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபர்கள் தான் ஷாபனா மற்றும் ஆர்யன்.

 

ஷபானா செம்பருத்தி நாடகத்தின் கதாநாயகியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரமான செழியன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் அண்மையில் இவர்கள் இருவரும் காதலிக்கும் செய்தியை ஷபானா ஒரு நிகழ்ச்சியின்போது கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்பொழுது ஆரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒரே மாதிரியான மோதிரங்களை அணிந்து இருப்பது போன்று புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவர்கள் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version