பிரபல சீரியல் நடிகை மரணம்!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!! 

0
288
Famous serial actress dies!! Sad fans!!
பிரபல சீரியல் நடிகை மரணம்!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!
சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்கள் மூலம் பிரபலமடைந்த நடிகை விஜயலட்சுமி அவர்கள் காலமானார். இவரது மறைவிற்கு சக சீரியல் நடிகர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஊதா பூ கண் சிமிட்டுகின்றது என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி ரஜினி, கமல் போன்று பல முன்னணி நடிகர்களுடன் நடிகை விஜயலட்சுமி  நடித்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் பாகத்தில் கண்ணாம்மாவின் பாட்டி கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.
70 வயதாகும் நடிகை விஜயலட்சுமி அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகை விஜயலட்சுமி அவர்கள் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதையடுத்து தூக்கத்திலேயே இவருது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.இவரது மறைவிற்கு சீரியல் நடிகர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.