கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு தவித்து வரும் ஏழைகளுக்கு சில லட்சம் கொடுத்து விளம்பரப்படுத்தும் நபர்கள் மத்தியில், பல லட்சம் ரூபாய் கொடுத்து சத்தமில்லாமல் இயல்பாக இருக்கும் பிரபல பாடகியின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாடகி சின்மயி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்ய புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளர். ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலை பாடி கொடுத்து, அதில் கிடைக்கும் பணத்தை கொரோனாவில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்ததாக கூறியுள்ளனர்.
பாடகி சின்மயின், இந்த அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களின் பாடல்களை விரும்பி கேட்கப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள நிலையில், அதன் மூலம் கிடைத்த 85 லட்சம் பணத்தை கொரோனாவில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி இருந்ததாக தகவல் வெளிவந்தது.மேலும் இதுவரை அவர்கள் பாடிய 3000 வீடியோ பாடல்களையும் அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணமானது அவர்களின் அடிப்படைத் தேவை மற்றும் கல்விக்காக பயன்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதனை தொடர்ந்து பாடகி சின்மயிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.