Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவால் பிரபல பாடகரின் உடல்நிலை கவலைக்கிடம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் தனது பாடல்களால் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தவர்.

பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.அண்மையில் இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் தனக்கு கொரோனா தொற்று  உறுதியானது என்றும் என்னை யாரும் நலம் விசாரிப்பதற்காக தொடர்பு கொள்ள வேண்டாம் நான் நலமாகவே இருக்கிறேன் என்று  அந்த வீடியோவில் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அவர்  சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைக் கேட்ட சினிமா திரையுலக சோகத்தில் ஆழ்ந்து ஆழ்ந்து உள்ளது. அவர் குணமடைந்து சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள்  வேண்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version