Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான பிரபல தமிழ் நடிகை!

தமிழ் சினிமாவில் “நிமிர்ந்து நில்” உள்ளிட்ட பல படங்களில்  நடித்த முன்னணி நடிகையான ராகினி திவேத, தமிழில் மட்டுமல்லாமல் கன்னட படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தலைவிரித்து ஆடுவதால், பெங்களூர் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகை ராகினி திவேதிக்கும் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துக்கும் சம்பந்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை ராகினி திவேதி-ஐ விசாரணைக்காக கைது செய்துள்ளனர். இவரிடம் நடக்கும் விசாரணைக்குப் பிறகு பல உண்மைகள் வெளிவரும் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

Exit mobile version