Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல தமிழ் நடிகைக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது!!! அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!!!

#image_title

பிரபல தமிழ் நடிகைக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது!!! அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!!!
பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்கள் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்கள் நடிகர் அஜித் அவர்கள் நடிப்பில் 2007ம் ஆண்டில் வெளியான ஆழ்வார் திரைப்படம் மூலமாக திரையுலகத்திற்குள் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை சன்டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் நடித்து பிரபலமடைந்தார்.
இதையடுத்து நடிகை ஸ்வேதா பந்தேகர் கடந்த 2022ம் ஆண்டு மல் மருகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தற்பொழுது சீரியல் நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதை மகிழ்ச்சியாக நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்கள் அறிவித்துள்ளார். இவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் நடிகை ஸ்வேதா பந்தேகர் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Exit mobile version