Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலியை கரம் பிடிக்கும் போகும் பிரபல நடிகர்! திருமண தேதி எப்போது தெரியுமா?

wedding

wedding

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் தன்னுடைய ஏதார்த்தமான நடிப்பால் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

விஷ்ணு விஷால் 4 வருடமாக காதலித்து வந்த தனது கல்லூரி ஜூனியர் ரஜினி என்ற பெண்ணை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு அழகிய மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.

vishnu vishal

விவகாரத்துக்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வந்த விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிக்க ஆரம்பித்தார்.முதலில் இருவரும் எல்லாரையும் போலவே நாங்கள் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என சொல்லிவந்தனர். ஆனால் தனிமையில் இருவரும் ஒன்றாக இருப்பது, முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி காதலை கன்பார்ம் செய்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷ்ணு விஷாலின் காதலியான ஜூவாலா கட்டா தன்னுடைய தோழிகளுடன் பிரைடல் பார்ட்டி கொண்டாடியுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் போது தோழிகள் மணப்பெண்ணுக்கு கொடுக்கும் பார்ட்டி இது. இதில் ஜூவாலா எதிர்கால மணமகள் என்கிற பேண்ட் அணிந்திருந்ததை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முதன் முறையாக தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் மனம் திறந்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், வரும் ஏப்ரல் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமண தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version