Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் அண்ணா நீங்க தான் என்னை காப்பாத்தனும்.. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கேரள இளைஞர்!!

Fan waiting to see Vijay

fanss1-1713499662

விஜய் அண்ணா நீங்க தான் என்னை காப்பாத்தனும்.. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த கேரள இளைஞர்!!

நடிகர் விஜய்யை பார்க்க தினமும் ஏராளமான நபர்கள் அவர் வீட்டிற்கு வருவது வழக்கம் தான். அவர் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. படப்பிடிப்பிற்காக வெளியூர் எங்காவது சென்று விடுவார். ஆனாலும் அவரை பார்த்துவிட்டு தான் செல்வோம் என அவரை தேடி வரும் ரசிகர்கள் சிலர் அடம்பிடிப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நடிகர் விஜய்யை காண பாலக்காட்டில் இருந்து பனையூருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞர் நடிகர் விஜய்யிடம் கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “என் பெயர் உன்னி கண்ணன். நான் விஜய் சாரை பார்க்க வேண்டும் என்ற் ஆசையில் கேரளாவில் இருந்து வந்துள்ளேன்.

அதன்படி அவரின் நீலாங்கரை வீட்டிற்கு சென்றேன் அங்கு போலீஸார் என்னை உள்ளேயே அனுமதிக்கவில்லை. அதேபோல பனையூர் சென்றேன் அங்கும் அவரை பார்க்க முடியவில்லை. அவருடன் எப்படியாவது ஒரு படம் நடித்து விட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதற்காக தான் நீளமான முடி வளர்த்து வருகிறேன். நான் எப்படியாவது விஜயை பார்க்க வேண்டும்.

இந்த நீளமான முடியால் என்னால் பெண் பார்க்க கூட செல்ல முடியவில்லை. எங்கள் வீட்டில் என்னை திட்டுகிறார்கள். விஜய் அண்ணனை பார்க்காமல் என்னால் முடியை வெட்ட முடியாது. எனவே நான் அவரை பார்த்தே ஆகவேண்டும். விஜய் அண்ணா எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்” என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இதை விஜய் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Exit mobile version