Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவரை ஏன் லியோவில் நடிக்க வைத்தார்கள் என்று ரசிகர்கள் விமர்சனம்!!! பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!!

#image_title

இவரை ஏன் லியோவில் நடிக்க வைத்தார்கள் என்று ரசிகர்கள் விமர்சனம்!!! பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!!

லியோ திரைப்படத்தில் பிரபல நடிகை மடோனா செபஸ்டியன் அவர்களை நடிக்க வைக்காமல் இருந்திருக்கலாம் என்ற பல வகையான விமர்சனங்களுக்கு நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் தற்பொழுது பதிலடி கொடுத்துள்ளார்.

2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மடோனா செபஸ்டியன் அவர்கள் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து 2016ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் மடோனா செபாஸ்டியன் அவர்கள் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் கவண், ஜுங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா, பா பாண்டி ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களின் தங்கையாக நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் நடித்துள்ளார்.

இந்நிலையில் லியோ திரைப்படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் அவர்களின் கதாப்பாத்திரம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. நடிகை மடோனா செபஸ்டியன் அவர்களை லியோ திரைப்படத்தில் நடிக்க வைக்காமல் இருந்திருக்கலாம் என்றும் ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார் வேண்டும் என்றும் பலரும் கூறி வந்தனர். தற்பொழுது இந்த விமர்சனங்களுக்கு நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த விமர்சனங்களுக்கு நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் “லியோ திரைப்படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சிறியது தான். இந்த கதாப்பாத்திரம் மிகப் பெரிய கதாப்பாத்திரம் என்று எல்லாம் நான் யோசிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் 100 சதவீதம் உழைப்பை கொடுத்தால் போதும். நாம் நடிக்கும் கதாப்பாத்திரம் சிறப்பாக வரும். மேலும் சிறப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படும்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version