உங்கள் குழந்தைகளின் வயிற்று குடல் புழு வெளியேற அருமையான வைத்தியம்!

0
229

உங்கள் குழந்தைகளின் வயிற்று குடல் புழு வெளியேற அருமையான வைத்தியம்!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக பாதிக்கக் கூடிய விஷயம் என்றால் அது வயிற்று குடல் புழுக்கள் தான். ஏன் இந்த குடல் புழுக்கள் வருகிறது என்பது யாருக்குமே தெரியாது?

நாம் சுத்தமில்லாமல் இருப்பது தான் இந்த குடல் புழுக்களுக்கு காரணம். உண்ணும் உணவில் சுத்தம் இல்லாமை, கை மற்றும் கால்களில் சுத்தம் இல்லாமை, நகங்களில் அழுக்கு சேர்தல், அதிகமாக இனிப்புகளை உண்ணுதல் போன்றவைகளால் உடலில் குடல் புழுக்கள் ஏற்படுகின்றன.

இப்பொழுது இயற்கையான முறையில் அதனை எப்படி வெளியேற்றலாம் என்பதை பார்க்கலாம்.

தீர்வு-1:

1. முதலில் பூசணி விதைகளை எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளவும் அல்லது நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

2. பெரியவர்களாக இருந்தால் அரை ஸ்பூன் பூசணி விதை பொடியுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து இரவு படுக்கப்போகும் முன் சாப்பிடவும்.குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும் பூசணி விதை பொடியுடன் கால் டீஸ்பூன் தேன் சேர்த்து இரவு படுக்கப்போகும் முன் சாப்பிடவும்.

3. இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து வர வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியே வந்து விடும்.

தீர்வு-2

அன்னாசிப்பழத்தை வாரத்தில் ஒரு முறை எடுத்துக் கொள்ளும் போது உடலில் உள்ள குடற் புழுக்கள் வெளியேறும்.

தீர்வு-3

வேப்பம்பூ அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதை இப்பொழுது யாரும் மதிப்பவர்கள் கிடையாது. வேப்பம்பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வேப்பம் பூக்களை எடுத்து அதை ரசம் வைத்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வரும் போது உடலில் தங்கியுள்ள எந்த விதமான பூச்சிகள் மற்றும் நச்சுக்கள் எதுவாக இருந்தாலும் வெளியேற்றிவிடும்.

இந்த மூன்று தீர்வில் நீங்கள் எந்த தீர்வினை வேண்டுமானாலும் பயன்படுத்தி பயன் பெறலாம்.