Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யப்பா… ரொம்ப பயமா இருக்குங்க!! கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீருக்குள் சாகசம் புரியும் பாரதி கண்ணம்மா வெண்பா!!

யப்பா… ரொம்ப பயமா இருக்குங்க!! கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீருக்குள் சாகசம் புரியும் பாரதி கண்ணம்மா வெண்பா!!

பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி கேரக்டரில் நடித்து வரும் பரினா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

ஒரு தொகுப்பாளினியாக இருந்து தமிழ் சீரியலுக்கு வந்தவர் தான் நடிகை பரீனா ஆசாத். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வெண்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த சீரியலில் திருமணமான பாரதியை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று பலவிதங்களில் பிரச்சனை செய்து வரும் வெண்பா கதாபாத்திரம் பாரதிகண்ணம்மா சீரியல் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

மேலும், வெண்பாவின் சூழ்ச்சியால் தான் பாரதியும் கண்ணம்மாவும் 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் இரட்டை குழந்தை பெற்றெடுத்த கண்ணம்மாவின் குழந்தைகளும் தனித்தனியே வளர இதுதான் காரணமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தில் இருக்கின்றது.

அத்துடன் இந்த சீரியலில் நடிக்கும் பரீனாவுக்கு சில வருடங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல் வெளிவந்து இருந்த நிலையில், தற்போது இவர் வயிற்றில் குழந்தையுடன் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தில் மிகவும் தீயாக பரவி வந்து கொண்டிருக்கின்றன.

மேலும், இதனைக்கண்ட ரசிகர்கள் அவர்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சீரியலில் பார்ப்பதற்கு இவர் கர்ப்பமாக இருப்பது தெரியவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

இதனை அடுத்து அவர் சிவப்புநிற உடையில் நீருக்குள் இருக்கும் போட்டோவை ரசிகர்கள், இது என்ன நீருக்குள் சாகசம் நீங்க வேற லெவல் போங்க என்று கூறுகின்றனர். மேலும், சிலர் என்ன பரீனா அக்கா இதெல்லாம் பயமா இருக்கு பாக்கும்போதே நீங்க எப்டி இதெல்லாம் பண்றீங்க..ரொம்ப கஷ்டம் என்றும் கூறுகின்றனர்.

Exit mobile version