Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாரதி கண்ணம்மா பரீனா கர்ப்பிணியாக இருக்காங்களா?!! சந்தோஷத்த இவ்ளோ சீக்ரெட்டா வச்சிக்கிட்டிங்களே!!

பாரதி கண்ணம்மா பரீனா கர்ப்பிணியாக இருக்காங்களா?!! சந்தோஷத்த இவ்ளோ சீக்ரெட்டா வச்சிக்கிட்டிங்களே!!

பாரதி கண்ணம்மா தொடரின் வில்லி கேரக்டரில் நடித்து வரும் பரினா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

கோலிவுட் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்தான் பாரதிகண்ணம்மா. மேலும், இந்த சீரியலை டிஆர்பி ரேட்டிங்கில் இப்பொழுது முதலிடத்தில் இருக்கின்றது. தற்போது இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் பரீனா ஆவார்.

இவருக்கு சில வருடங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது. இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல் வெளிவந்து இருந்த நிலையில், தற்போது இவர் வயிற்றில் குழந்தையுடன் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தில் மிகவும் தீயாக பரவி வந்து கொண்டிருக்கின்றன.

கர்ப்பமாக இருந்தாலும் நடிகை பரீனா இன்னும் சில மாதங்கள் வரை சீரியலில் நடிப்பது விடாமல் தொடர இருப்பதாக கூறி இருக்கின்றார். மேலும் ரெஸ்ட் எடுக்கலாம்ல? என்று கேட்கும் தனது நட்புகளுக்கும் ,உறவுகளுக்கும் நான் என்னை ரசிக்கிற பல்லாயிரக்கணக்கான உள்ளங்களுக்கு நான் தரப்போகும் நன்றி இது.

ஓய்வில்லாமல் நான் நடிப்பது மட்டுமே அவர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு. எனவே நான் தாய்மைப்பேறு அடைவதற்கு 2 மாதங்கள் முன்பு வரை நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனை ரசிகர்கள் இன்முகத்தோடு வரவேற்று இருக்கின்றனர்.

மேலும், அவர் பாரதி சீரியலில் வில்லியாக நடித்து இருந்தாலும் உண்மையில் காணப் போனால் அவர் மிகவும் நல்ல உள்ளம் படைத்தவராக இருக்கிறார். மேலும், தற்போது இவர்கள் தாயாகப் போகிறார்கள் என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். சீரியலில் பார்ப்பதற்கு இவர்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவில்லை என்றாலும் தற்போது தெரிந்தவுடன் ரசிகர்கள் மிகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version