ஓபிஎஸ் செய்த அந்த காரியத்தால் சட்ட சபையில் எழுந்த சிரிப்பலை!

0
158

தமிழக சட்டசபையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு வைத்துக்கொண்டு காரசார விவாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதலில் இந்த சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் விவசாயிகளின் வாழ்வு மேம்பட மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த தீர்மானத்திற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

கார்த்தி மாகாண சபை உறுப்பினர் கேபி அன்பழகன் உரையாற்றும் போது அவசரமாக தனித் தீர்மானம் கொண்டு வராமல் அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் மத்திய அரசிடம் வலியுறுத்த செய்யலாம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்கலாம் என்று தெரிவித்தார்.

எதிர்க் கட்சியின் துணைத்தலைவர் ஓபிஎஸ் உரையாற்றும்போது போன்ற வேளாண் சட்டங்களை மீறுகின்ற பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி உண்மைத் தன்மையை விளக்கி தெரிவித்து நமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்றால் அந்தத் திருத்தத்தை கொண்டு வரலாம் என்று தெரிவித்தார். அதோடு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும் முடிவுக்கு நாம் அனைவரும் கட்டுப்படுவோம். ஆனாலும் பல சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்வரை நாம் பொறுமையாக இருந்து தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய அவை முன்னவர் மற்றும் மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் குழந்தைகளை கூட இந்த சட்டத்தில் உள்ள பாகங்கள் பற்றி கேட்டால் தெளிவாக எடுத்துச் சொல்வார்கள். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்கள் என்று அதிமுகவிடம் கேள்வியை எழுப்பினார். அந்த சமயத்தில் உரையாற்றிய ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதால் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை மேற்கொள்ளலாம் சாதக, பாதகங்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை தெளிவாக கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகின்றோம். அந்த தீர்மானத்தை இருக்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்கள் என்று மீண்டும் durai-murugan கேள்வி எழுப்பிய சூழ்நிலையில், எங்களை சட்ட சபையை விட்டு வெளியே அனுப்பும் நோக்கத்திலேயே அவை முன்னவர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார் ஓபிஎஸ்.

அத்துடன் அவர் உரையாற்றும்போது நதிகளில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு என்ற சிவாஜி கணேசன் நடித்த தேனும் பாலும் என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை பாடி காட்டி இருக்கின்றார். அத்துடன் மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் என்னுடைய நிலை என்ன என்பது அவருக்கு தெரியும் பன்னீர்செல்வம் தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை உண்டானது. இதனை அடுத்து இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது.