Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சொத்தில் பங்கு தராததால் சொந்த மைத்துனராலேயே அடித்துக் கொல்லப்பட்ட விவசாயி!

பாகல்கோட்டை மாவட்டம் சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரப்பா இவருடைய மகன் சங்கப்பா இவர் ஒரு விவசாயி என சொல்லப்படுகிறது. இவருடைய சகோதரியை ரமேஷ் அங்கடி என்பவர் திருமணம் செய்திருக்கிறார்.

மகளை திருமணம் செய்திருந்ததால் ஈரப்பா தன்னுடைய மருமகன் ரமேஷ் அங்கடிக்கு விவசாயம் செய்வதற்காக சிறிய நிலத்தை வழங்கியிருந்தார். இந்த நிலத்திற்கு அருகே இருக்கின்ற தோட்டத்தில் சங்கப்பா விவசாயம் செய்து வந்தார் என சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சங்கப்பாவிடம் இருக்கின்ற விவசாய தோட்டத்தில் பாதி நிலத்தை கொடுக்குமாறு ரமேஷ் அங்காடி கேட்டதாக சொல்லப்படுகிறது இந்த நிலப் பிரச்சனையின் காரணமாக, 2 பேருக்குமிடையே தகராறு உண்டானது.

இப்படியான சூழ்நிலையில், நேற்று முன்தினம் காலை தோட்டத்திற்கு சென்ற சங்கப்பாவை மர்ம நபர்கள் கல்லால் தலையில் அடித்து கொலை செய்தார்கள் என சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்தவுடன் பாகல்கோட்டை புறநகர் காவல் துறையினர் விரைந்து வந்து சங்கப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த சமயத்தில் நில பிரச்சனையின் காரணமாக சங்கப்பாவை அவருடைய அக்காள் கணவர் ரமேஷ் அங்கடி மற்றும் சுனில் உள்ளிட்ட இருவரும்தான் கல்லால் அடித்து கொலை செய்ததாக தெரியவந்திருக்கிறது.

இதுதொடர்பாக பாகல் கோட்டை புறநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரமேஷ் அங்கடி மற்றும் சுனில் உள்ளிட்டோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Exit mobile version