பஞ்சதாங்கி கண்மாய் தூர்வார நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்!

0
141
Farmers' blockade protest demanding action to clear panchathangi Kanmai!
பஞ்சதாங்கி கண்மாய் தூர்வார நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்!
வருசநாடு பஞ்சதாங்கி கண்மாய்  சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து, அதில் தென்னை ,இலவமரம், மா உள்ளிட்ட விவசாயம் செய்து வந்தனர். கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற பஞ்சதாங்கி  விவசாய சங்கத்தினர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, கண்மாயில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர், மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2021 டிச. 25 ஆம் தேதி தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. மரங்கள் முழுமையாக வெட்டப்பட்டு  பல மாதங்களாகியும் கண்மாயை தூர்வார அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த கண்மாயினை  ஆழப்படுத்தி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பஞ்ச தாங்கி விவசாயி சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்ச தாங்கி கண்மாய் விவசாய சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் கண்மாயை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். என கடமலை-மயிலை  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆணையாளர்கள்  திருப்பதி முத்து, திருப்பதி வாசன்,  கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் அருண் பாண்டி ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் 15 தினங்களுக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.பஞ்ச  தாங்கி விவசாய சங்க பிரதிநிதி கணேசன் கூறுகையில்: வருஷநாடு, முறுக்கோடை,   தங்கம்மாள்புரம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளின் பஞ்சத்தை போக்கக்கூடிய கண்மாய் தான் ,இந்த பஞ்ச தாங்கி கண்மாய். இந்தக் கண்மாயை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சிலர் மீண்டும் கண் மாயை ஆக்கிரமிப்பு செய்து தென்னை மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வரும் 15 தினங்களுக்குள் கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.