Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகளே..!! உங்களுக்கு ரூ.6,000 வேண்டுமா..? அப்படினா மார்ச் 31ஆம் தேதியே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

விவசாயிகள் தனி அடையாள அட்டை பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அடையாள அட்டை இருந்தால் தான், இனி மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். விவசாயிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்குவற்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் அனைவரும் தனி அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு பணம் வராது என கூறப்படுகிறது. இந்த அட்டை பெற மார்ச் 31ஆம் தேதிக்கு விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருடன் அரசு கள அலுவலர்கள் அல்லது இ-சேவை மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் 9,59,25,587 பேரும், தமிழ்நாட்டில் 21,94,651 பேரும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

Exit mobile version