Farmers: இந்தியா ஒரு விவசாய நாடு என்றால் மிகையாகாது. நம் தமிழக அரசு விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பை தவிர்க்க பயிர்களுக்கான காப்பீடு திட்டத்தை நவம்பர் 30, 2024 வரை நீட்டித்துள்ளது.
தேசிய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது விவசாயிகள். விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படுகிறார்கள். விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, உணவு உற்பத்தி, கிராமப்புற வளர்ச்சி என பல முக்கிய பண்பை கொண்டுள்ளது என்றால் மிகையாகாது.
அந்த வகையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நம் தமிழக அரசால் செய்து தரப்படுகிறது. இந்நிலையில் பருவகால மழையால் விவசாயிகளின் பயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இந்த நிலையில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பை தவிர்க்க காப்பீட்டு திட்டத்திற்கான கால அளவை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
அதில் விண்ணப்பிக்க விவசாயிகள் நவம்பர் 30, 2024 வரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் இல்லை என்றால் இந்த உலகில் மனிதன் சாப்பிட்ட உணவு இல்லாமல் போய்விடும்.
அனைவரின் வயிறும் தினமும் நிறைய காரணம் விவசாயிகள் தான். ஆனால் விவசாய தொழிலை இந்த காலகட்டத்தில் கேவலமாக பார்க்கிறார்கள். விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் என கடந்து அவர்கள் உழைப்பு வீணாக போனாலும் பல நன்மைகளை செய்கின்றனர்.