Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்:? செவிசாய்க்குமா மத்திய மாநில அரசு!

சேலம்-சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனைக் கண்டித்து எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாய பெருமக்கள் மீண்டும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சீதாபழம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எட்டு வழி சாலைக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்த நேரத்தில் அனைவருக்கும் உணவளித்த விவசாயிகளின் நிலத்தை மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்வது மிகவும் மோசமான செயல் என்றும்,இது ஏழைக மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.மேலும் எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version