அரசிற்கு எதிராக திரும்பிய விவசாயிகள்! ஸ்தம்பிக்கபோகும் தமிழகம்!

0
128

மத்திய அரசு அலுவலகங்கள் முன் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.

இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும், அழிக்கும் வகையில், மத்திய அரசு வேளாண் துறைக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையிலான, மூன்று 3 வேளாண்சட்டங்களை எதிர்க்கும் விதமாக நாடு முழுவதிலும் விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண்துறைக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அதை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் பாராட்ட குழுவின் சார்பாக நாடு முழுவதிலும், நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில செயற்குழு நவம்பர் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாய சங்கங்கள் பங்கேற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் பொருட்டு நடைபெற இருக்கின்ற இந்த போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கு பெற வேண்டும் இந்த போராட்டத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.