ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா:? இந்த ஒரு ஜூஸ் போதும்!

0
185

ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா:? இந்த ஒரு ஜூஸ் போதும்!

தொப்பையை குறைக்க பலரும் பலவிதமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றன.
இருந்தபோதிலும் பெரிதாக பயன்கிடைத்த பாடில்லை.

ஒரே ஒரு வாரம் கீழே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு ஜூசை குடித்து பாருங்கள் தொப்பை குறைந்த வித்தியாசம் உங்களுக்கே தெரியும். ஜூசை எவ்வாறு தயாரிப்பது என்பதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கேரட் – 1

புதினா – 10-லிருந்து 20 இலைகள்

பீட்ரூட்-1 (சிறிய அளவுடைய பீட்ரூட்)

சிறிதளவு கல் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பழ சாறு.

(அல்லது)

கேரட் – 1

தக்காளி – 1

புதினா – 10-20 இலைகள்

சிறிதளவு கல் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு.

செய்முறை:

கேரட் பீட்ரூட் மற்றும் பொதினாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்து வைத்த இந்த பேஸ்ட்டில் 250 மில்லி தண்ணீர் கலந்து,அதில் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும்.

இதேபோன்று பீட்ரூட்டிற்கு பதில் தக்காளியை சேர்த்து அரைத்துக் ஜூஸ் செய்து கொள்ள வேண்டும்.

இந்த ஜூசை காலை வெறும் வயிற்றில் ஒரு வாரம் குடித்து வருகையில் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைய தொடங்கும்.விரைவில் உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து உடல் எடை மற்றும் தொப்பை குறைய வழிவகுக்கும்.