Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை!

தடுப்பூசி செலுத்தாததால் தனது மகனை காண தந்தைக்கு தடை!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றானது மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் உள்ள பரவி உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மிக குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டுள்ளன.

இந்த நிலையில் கனடாவில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதி வேகமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மருத்துவ வரி வசூலிக்கப்படும் என அந்த  அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாததால்  தந்தை ஒருவர் தன்னுடைய 12 வயது மகனை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த கனடா அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டில் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் பெண் ஒருவர் தனது 12 வயது மகனுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளார்.

இந்த நிலையில் 12 வயது சிறுவனின் தந்தைக்கு, அந்த சிறுவனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தனது மகனை விடுமுறை நாட்களில் பார்ப்பதற்கும் கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளார். அதற்கு அந்த பெண்மணி, அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. இதனால் தனது மகனை சந்திக்க தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் வரை மகனை பார்க்க தந்தைக்கு தடை விதித்துள்ளது. அதற்குள் அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version