chennai:சென்னை திருவொற்றியூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்பா, அண்ணன். தாயாரின் புகாரை தட்டி கழித்த காவல்துறை.
தமிழகத்தில் சமீப காலமாக இங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்ட ஒழுங்கு சீரழிந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி கட்சி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள் யார் ஆட்சியில் இருந்தாலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் சட்ட ஒழுங்கு சீராகும். ஆனால் அந்த சட்டத்தை கையில் வைத்து இருக்கும் பொலிசாரே இதற்கு துணை நிற்கும் அவலம் தமிழகத்தில் தான் நடைபெறும்.
அந்த வகையில் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமியை அவரது தந்தையும் அண்ணன் முறையான பெரியப்பா மகனும் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருவதாக சிறுமி தாய் போலீசாரிடம் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அந்த புகாரில் குற்றம் புரிந்த சிறுமி தந்தை மற்றும் அண்ணனுக்கு ஆதராவாக போலீசார் செயல்படுவதாக சிறுமியின் தாய் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதாவது அந்த தாய் செய்தியாளர்களிடம் கொடுத்த பேட்டியில் எனக்கு என் கணவருக்கும் திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு 13 வயதுடைய மகள் இருக்கிறார். என கணவனை பிரிந்து 9 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். என்னுடம் மகள் வசித்து வருகிறார். என் மகள் வயதிற்கு வந்த நாள் முதல் 9 மாதங்களாக என் கணவன் மற்றும் அண்ணன் முறையான பெரியப்பா மகனும் ரீதியாக தொல்லை அளித்து வருகிறார்கள். அவர்கள் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த போது அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து இருந்தார்.