Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன்

ஹியரிங் எய்ட் அணிந்ததும் காது கேட்காத குழந்தையின் ரியாக்சன்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் அடிசன் என்பவர் தனது நான்கு மாத குழந்தைக்கு காது கேட்காததை அறிந்து மிகவும் துயரத்துடன் இருந்தார். மருத்துவர்கள் குழந்தைக்கு பல்வேறு சிகிச்சை அளித்த போதும் குழந்தையின் காது சரியாகவில்லை.

இந்த நிலையில் தனது அன்பு மகளுக்காக ஒரு ஹியரிங் எய்ட் வாங்கி வந்து குழந்தையின் காதில் அணிய வைத்தார். அதன் பின்னர் அக்குழந்தையின் அம்மா பேசிய குரலை கேட்டதும் அக்குழந்தையின் ரியாக்சன் அபாரமாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு பின் முதல்முறையாக குழந்தை தனது அம்மாவின் குரலை கேட்டதும் ஆச்சரியமடைந்து குழந்தைத்தனமாக கத்திய வீடியோ ஒன்று தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ ஒரு சில மணி நேரங்களில் ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை பெற்று வைரலாகியுள்ளது. கள்ளங்கபடமில்லாத அந்த குழந்தை தனது அம்மாவின் குரலை முதல் முதலாக கேட்ட மகிழ்ச்சி அந்த குழந்தையின் முகத்தில் தெரிவதாக இந்த வீடியோவை பார்த்து பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

https://twitter.com/addisonjrp/status/1202561439623450625

Exit mobile version