Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கரூர் மாவட்டத்தில் மகனை இழந்த தந்தை தற்கொலை! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!

Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!

கரூர் மாவட்டத்தில் மகனை இழந்த தந்தை தற்கொலை! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

கரூர் மாவட்டம் வெங்ககல்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (43). இவர் நிதி நிறுவனத்தில் பணி  புரிந்து வந்தார். இவரது மகன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார் அன்று முதல் சுப்பிரமணி மன வேதனையில்  இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.

மேலும் இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சுப்ரமணி தனியாக இருந்தார் அன்று அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கடந்துள்ளார். மேலும் அவரை காணவந்த அவரது உறவினர் சுப்ரமணியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்து அவர்களும் அவரது உறவினரும் சுப்பிரமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மற்றொரு மகன் பரத் தந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுப்ரமணிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் காந்த கிராமத்தில் அமைந்துள்ள அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் சாலை விபத்தில் மகன் இறந்த துக்கத்தில் தவித்து வந்த தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version