தந்தைக்கு அறுவை சிகிச்சை.. கண்டுகொள்ளாத விஜய்!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0
89
#image_title

தந்தைக்கு அறுவை சிகிச்சை.. கண்டுகொள்ளாத விஜய்!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்படும் விஜய்யின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி அவரின் திரைப்பயணத்திற்கு வழி காட்டியாக இருந்தார்.இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சொந்த காரணங்களால் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும்,விஜய்க்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்வதில்லை என்ற தகவல் இணையத்தில் உலா வந்தது.

இந்நிலையில் தற்பொழுது எஸ்.ஏ.சந்திரசேகருக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.அதன்படி அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் தொடர்ந்து பெட் ரெஸ்ட் எடுத்து வருகிறார்.சிகிச்சை குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தகவல் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை ஒரு முறை கூட மகன் என்ற முறையில் விஜய் சென்று பார்க்காதது வருத்தமான நிகழ்வாக இருக்கின்றது.என்னதான் தந்தை மீது கோபம் இருந்தாலும் அவர் கஷ்டத்தில் இருக்கும்பொழுது அவருக்கு உறுதுணையாக இருக்காத ஒருவன் சிறந்த மகனாக இருக்க முடியாது.படங்களிலில் மட்டும் குடும்பத்தின் மீது பாசத்தை கொட்டுவது போன்று நடிக்கும் விஜய் நிஜத்தில் அப்படி இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.