Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல செய்தியாளர் பாத்திமா பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

பிரபல நடிகை மற்றும் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு மற்றும் அவரது கணவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் பாத்திமா பாபுவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் வந்துள்ளது.

 

பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட இவர் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பின் இப்பொழுது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் இவரும் மோகன் வைத்தியா இணைந்து நடனம் ஆடி வருகிறார்கள்.

 

இந்நிலையில் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டுசெல்லப்படும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

அவரும், அவரது கணவரும் சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் மீண்டும் பாத்திமா பாபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் படங்கள் வெளியானது. இந்த புகைப்படம் திரைத்துறை பேசும் பொருளாக ஆகி உள்ளது. இதை பற்றி பாத்திமா பாபு வீடியோ மூலம் தனக்கு என்ன ஆனது என்று விளக்கமளித்துள்ளார்.

 

கடந்த மே 1ஆம் தேதி அன்று எனக்கும் என் கணவருக்கும் கொரோனா பாதிப்பு என வந்தது. நான் 5 நாட்களில் குணமடைந்து விட்டேன். ஆனால் கணவர் குணமாவதற்கு 40 நாள் ஆனது. இந்நிலையில் 22ஆம் தேதி எனக்கு பின்பக்கத்தில் கடுமையான வலி இருந்தது. மருத்துவமனைக்குச் சென்று சோதித்து பார்த்தபோது பரிசோதனையில் சிறுநீரகக் கற்கள் இருப்பதாக தெரிய வந்தது. அதை 7.8 மில்லிமீட்டர் இருந்ததால் கடந்த 26ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்கள். இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். மேலும் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால் சிறுநீரக கற்கள் சீக்கிரம் கரைந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version