Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தைகளை குறி வைக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்!! காரணங்கள் மற்றும் இதன் அறிகுறிகள்!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு முதுமை கால நோயாக இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் பருவத்தினரிடையே இந்த கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக குழந்தைகளின் கல்லீரலில் கொழுப்பு சேர்வது அதிகரித்து வருகிறது.குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த பாதிப்பை ஆல்கஹாலிக் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கின்றோம்.கடந்த இருப்பது ஆண்டுகளில் இந்த கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று ஆய்வு தகவல் மூலம் தெரிய வந்திருக்கிறது.

கொழுப்பு கல்லீரல் நோய் அறிகுறிகள்:

1)உடல் சோர்வு
2)அடிவயிற்று வலி
3)மூச்சுத் திணறல்
4)சிறுநீர் நிறம் மாற்றம்
5)குமட்டல்
6)வாந்தி
7)தோல் அலர்ஜி
8)நமைச்சல்
9)கணுக்கால் வீக்கம்
10)கால் வீக்கம்
11)உடல் பலவீனம்

கல்லீரலில் கொழுப்பு சேர காரணங்கள்:

1)மோசமான உணவுப் பழக்கவழக்கம்
2)உடல் பருமன்
3)நீரிழிவு நோய்
4)ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று
5)இன்சுலின் குறைபாடு

கொழுப்பு கல்லீரலை கண்டறியும் சோதனைகள்:

ALT மற்றும் இமேஜிங் சோதனைகள் மூலம் குழந்தைகளுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதை கண்டறியலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் குழந்தைகளிடையே தென்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வைப்பது அவசியமாகும்.

இது தவிர உடற்பயிற்சி,நடைபயிற்சி,ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மூலம் கொழுப்பு கல்லீரல் பாதிப்பை குணப்படுத்திக் கொள்ளலாம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொண்டால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.தினமும் குழந்தைகள் எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருக்கும் பெரியவர்கள் மது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.உடற்பயிற்சி செய்தல்,நீரிழிவு நோயை கட்டுப்படுத்தல் போன்வற்றின் மூலம் கொழுப்பு கல்லீரல் பாதிப்பை குணப்படுத்தலாம்.

Exit mobile version