Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆளுங்கட்சியின் அடிமையாக மாறி போன ஓபிஎஸ்? முக்கிய தலைவர் கதறல்!

சட்டசபையில் ஓபிஎஸ் அவர்களின் நடவடிக்கைகள் போன்றவற்றை கவனித்து பார்க்கும்போது அவர் அதிமுகவிற்கு தலைமை தாங்கும் தகுதி இழந்துவிடடார் என்பதை தான் காண்பிக்கிறது. என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கிறார். ஒருபுறம், ஊழல் வழக்குகள் மறுபுறம் கொடநாடு கொலை கொள்ளை வழக்குகள் போன்ற பிரச்சனைகளில் தன்னை எதிலுமே கைது செய்துவிட வேண்டாம் நான் உங்களுடைய அடிமை தான் என்பதை போல அவருடைய பேச்சுக்களும், நடவடிக்கைகளும், இருக்கிறது என்று கே சி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கிறார்.

தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது இந்த சூழ்நிலையில், கடந்த சனிக்கிழமை மத்திய அரசு சார்பாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என்று தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். அந்த சமயத்தில் அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தார்கள். அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெளிநடப்பு செய்தார்கள். அதன் பிறகு மீண்டும் அவை நடவடிக்கைகளில் அதிமுகவினர் பங்கேற்றார்கள். அதன் பின்னர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் இடையில் இறைவனின் சிரிப்பு இதுதான் என்னுடைய தற்போதைய நிலை இது அவை முன்னவர் துரைமுருகனுக்கு நன்றாக தெரியும் என்று சொல்லியிருந்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தான் தெரிவித்த கருத்துகள் ஏதேனும் எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் மனதை தனிப்பட்ட முறையில் புண்படுத்தி இருந்தால் அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினாலும் அவையில் ஓபிஎஸ் இந்த பேச்சு அதிமுகவினரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு பல கேள்விகளை எழ செய்தது இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி ஓபிஎஸ் முழுக்க முழுக்க ாலும் கட்சியிடம் விழுந்துவிட்டார் இதன் காரணமாக தான் அவருடைய சட்டசபை பேச்சு நடவடிக்கைகள் அவரது இயல்புக்கு மாறாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

கோடநாடு கொலை வழக்கு மற்றும் அதிமுகவினருக்கு எதிரான ஊழல் வழக்குகள் போன்ற பிரச்சனைகளில் ஆளும் கட்சியின் பிடி இறுகி வரும் சூழ்நிலையில், அது போன்ற எந்த விதமான வழக்குகளிலும் தன்னை கைது செய்ய வேண்டாம் என்று ஆளும் கட்சிக்கு சூசகமாக தெரிவித்திருக்கிறார் பன்னீர்செல்வம். இதன் காரணமாகத்தான் நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு என தன்னுடைய நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் செங்கோட்டையன், கேபி முனுசாமி, உள்ளிட்ட தலைவர்களும் சட்டசபையில் திமுகவை புகழ்ந்து உரையாற்றி வருகிறார்கள். இதற்கு முன்னால் இவர்கள் பாஜகவின் அபிமானிகளாக இருந்தார்கள். தற்சமயம் திமுகவின் அபிமானிகளாக மாறிவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார் கே சி பழனிச்சாமி.

இவர்கள் எந்த அளவிற்கு மாறி இருக்கிறார்கள் என்று சொன்னால் திமுகவின் சட்டசபை உறுப்பினர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார் ஏனென்றால் அவர்கள் செய்யவேண்டிய வேலையை எதிர்கட்சியில் இருக்கின்ற ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த ஊழல் வாதிகள் முன்னெடுத்து கொண்டே இருக்கிறார்கள் இதன் காரணமாக, திமுகவைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர்கள் தன்னை புகழும் வேலையை செய்யவேண்டாம் என ஸ்டாலின் தெரிவிக்கும் அளவிற்கு இவர்களுடைய நடவடிக்கைகள் இருக்கிறது. இவர்களுடைய இந்த நிலைமையை பார்த்து அதிமுகவின் தொண்டர்கள் கொதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் கே சி பழனிச்சாமி.

ஒரு பக்கம் பாஜகவிற்கு அடிமையாகவும் மறுபக்கம் திமுகவிற்கு அடிமையாகவும் இவர்கள் மாறி இருக்கிறார்கள். அதிமுக தொண்டனை பொறுத்தவரையில் ஒருபுறம் பாஜகவை எதிர்த்து நிற்க வேண்டும், எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரையில் இந்த வலிமையான அதிமுக எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெற்று விடுகின்றன. நேர்மையான இயக்கமாக குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்ட தலைவர்களால் நடத்தப்படுகின்ற ஒரு இயக்கமாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

அடுத்தடுத்து வழக்குகளில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எஸ் பி வேலுமணி, கேபி முனுசாமி என்று யார் கைதானாலும் அதிமுகவிற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. யாரை நம்பியும் அதிமுக செயல்படவில்லை. ஒட்டுமொத்தமாக பன்னீர்செல்வம் திமுகவை கெஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார். இதனால் அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற தகுதியை இழந்துவிட்டார் என கே சி பழனிச்சாமி மிகக் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version