Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிஜிட்டல் முறையில் மத்திய பட்ஜெட்!

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது, அதிகமான பக்கங்களில் அச்சிடப்படும் துணிப்பைகளில் கட்டப்படும். இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும்.

இதில், நிதி மந்திரி மற்றும் இணை மந்திரிகள் பங்கேற்பார்கள். இந்த, நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில், ஏராளமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப் படுத்தப்படுகின்றனர். குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது.

பட்ஜெட் ஆவணங்களில், நூற்றுக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படும் ஏராளமான காகிதங்கள் தேவைப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் தேவைப்படும் காகிதங்கள் அதிகமான மரங்களின் ஆயுளை குறைக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, டிஜிட்டல் பணிகளுக்காக குறைவான எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டும் தற்போது ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version