Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மதுக்கடைகளை மறந்த மத்திய அரசு! மகிழ்ச்சி வெள்ளத்தில் மது பிரியர்கள்!

Federal government forgets liquor stores! Wine lovers in a flood of joy!

Federal government forgets liquor stores! Wine lovers in a flood of joy!

மதுக்கடைகளை மறந்த மத்திய அரசு! மகிழ்ச்சி வெள்ளத்தில் மது பிரியர்கள்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. இந்நிலையில் அவற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் ஏதும் பயன் அளிக்கவில்லை. தடுப்பூசி போட்ட 90 நாட்களிலேயே மீண்டும் தொற்று உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தை தடுப்பூசி போட்ட நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலருக்கு தொற்று உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் அவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் பல கட்சி அரசியல்வாதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அந்த வரிசையில் திமுக எம்பி மற்றும் ஸ்டாலினின் தங்கையான கனிமொழிக்கும் கொரோனா வெற்றி உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளடைவில் இந்த தொற்றானது அதிகரித்து வருவதால்,இன்று அதிக தொற்று பரவிய மாநில முதலமைச்சர்கள் அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில் சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு தற்போது போடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியதாவது, அனைத்து உணவகங்கள் கடைகள் திரையரங்குகள் வாடிக்கையாளர்கள் 50 மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

திருமணங்களில் 100 நபர்களுக்குள்ளும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும்.
ஆலயங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
திருவிழாக்கள் போன்ற எந்த மதசார்பு சம்பந்தப்பட்ட கூட்டங்களுக்கும் அனுமதி மறுத்துள்ளனர்.
நடிகை மற்றும் நடிகர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்னரே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50% இருக்கைகள் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இது போல் மக்கள் அதிகமாக கூட்டம் கூடும் இடங்களுக்கு தடைவிதித்த மத்திய மாநில அரசுக்கு மதுக்கடைகளில் அதிக கூட்டம் கூடும் என்பதை மறந்து விட்டார்கள். மது கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை. அதனால் மது பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

அதே சென்ற வருடம் ஊரடங்கு போடப்பட்ட போது மது கடைக்கும் கட்டுப்பாடுகள் போடப்பட்டது. பல மாதங்கள் கழித்து மதுக்கடையை திறந்ததால் வரிசை வரிசையாக நின்றபடி மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆனால் தற்போது அனைத்திற்கும் கட்டுப்பாடு போட்ட மத்திய அரசு மது கடைக்கு மட்டும் கட்டுப்பாடு போடவில்லை.

Exit mobile version