மத்திய அரசின் கோல்டன் கார்டு காப்பீடு!! 5 லட்சம் வரை சிகிச்சை இலவசம்!!

0
158
Federal Government Golden Card Insurance !! Up to 5 lakh treatment is free !!

மத்திய அரசின் கோல்டன் கார்டு காப்பீடு!! 5 லட்சம் வரை சிகிச்சை இலவசம்!!

இந்த கொரோனா பிரச்சினை நேரத்தில் மருத்துவக் காப்பீடு என்பது நம் ஒவ்வொருவருக்கும் மிகவும்  முக்கியமானதாகும். இந்த காலகட்டத்தில்  மருத்துவச் செலவுகள்  மிகவும் அதிகமாக உள்ளன. கொரோனா தொற்றை குணப்படுத்தும்  சிகிச்சைக்கே லட்சக்கணக்கில் செலவாகிறது. இந்த மருத்துவமனை செலவுகள் நோயை விட அதிகம் அச்சப்படுதுகிறது. இந்நிலையில்,  காப்பீடு என்பது பெரிதும் உதவும்.

மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் மிகவும்  அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். அங்கும் சிகிச்சைக்கு இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர். அதற்காகவே மத்திய அரசால் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்திய அரசின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாகும். இதில் வழங்கப்படும் ஒரு அட்டையின் மூலம் ஏழை எளிய மக்கள் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். உங்களிடம் சுகாதாரக் காப்பீடு எதுவும் இல்லாவிட்டால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நீங்கள் சிகிச்சை பெறலாம்.

இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற முடியும். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் என அனைவருக்கும் உதவும். ஆயுஷ்மான் பாரத் கோல்டன் கார்டைப் பெற,  அருகிலுள்ள பொதுச் சேவை மையம் அல்லது மாவட்ட அலுவலகத்திற்குச் சென்று இதற்கு விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் கோல்டன் கார்டைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று, உங்களது தொலைபேசி எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். பிறகு உங்களது தொலைபேசி எண்ணிற்கு வரும் ஒடிபி எண்ணை பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். பின் உங்களது பெயர், ரேஷன் அட்டை,  தொலைபேசி எண் போன்ற விவரங்கள் சரிபார்க்க வேண்டும். நீங்கள் இதற்குத் தகுதியுடையவராக இருந்தால் உங்களுக்கு கோல்டன் கார்டு கிடைக்கும்.