கோவாக்ஸ் என்று சொல்லப்படும் தடுப்பூசி வினியோகத் திட்டத்தின் கீழ் 4 நாடுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு சீரம் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சார்ந்த சீரம் இந்தியா நிறுவனத்திற்கு எதிரான தடுப்பூசிகளை தயார் செய்து வருகின்றது. நாட்டின் தேவை போக கூடுதலாக இருக்கக்கூடிய தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. திட்டத்தின்கீழ் நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், உள்ளிட்ட நாடுகளுக்கு 50 லட்சம் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது ஆகவே நாளை முதல் ஏற்றுமதி ஆரம்பமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.